ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பிலான 2 அறிக்கைகளையும் வெளியிட விரும்பவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.
இமாம் மற்றும் அல்விஸ் விசாரணை குழுவின் அறிக்கையில் ஜனாதிபதிக்கு ஆதரவு கொடுத்தவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதால் குறித்த அறிக்கைகளை பகிரங்கப்படுத்த விரும்பவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்பின் 38 ஆவது பிரிவின் ஏற்பாடுகளை ஜனாதிபதி மீறியுள்ளார்.
அரசியலமைப்பை ஜனாதிபதி மீறியுள்ளதால் அவருக்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டு வர முடியும் என உதயகம்மன்பில சுட்டிக்காட்டியுள்ளார்.