இந்திய பிரதமர் மோடி எனது நண்பர். அவருடன் சமீபத்திய பேச்சுவார்த்தைகளின் போது ரஷியா-உக்ரைன் போர் குறித்து மிகுந்த கவலை தெரிவித்தார்.
மோடியின் இந்த அக்கறைக்கு ரஷியா நன்றியுடன் இருக்கிறது.
மோடியை சந்திக்கும் போது இந்திய திரைப்படங்களுக்கு மேலும் ஊக்கம் அளிப்பது குறித்து விவாதிக்கலாமே தவிர
உக்ரைன் உடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பில் விவாதிக்க முடியாது.
ரஷியாவை இந்த போரில் அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பே தள்ளியது.
ரஷிய ராணுவம் உலகின் மிகவும் போர்த்திறன் வாய்ந்த மற்றும் உயர் தொழில்நுட்பப் படைகளில் ஒன்றாக மாறியுள்ளது.
ரஸசியாவுக்கு எதிராக இந்தப் போரை நடத்துவதில் நேட்டோ சோர்வடையும்.
போரில் எங்களது கை ஓங்கி இருக்கிறது. நாங்கள் வெற்றி பெறுவோம்.
உக்ரைன் ராணுவம், துல்லியமான ஆயுத விநியோக அமைப்புகளை சொந்தமாக கையாள முடியாது.
சமாதான பேச்சுவார்த்தையை நாங்கள் விரும்புகிறோம்.
ஆனால் அந்த முயற்சிகளில் இருந்து உக்ரைன் பின் வாங்குகிறது.