நாட்டில் தமிழ் சினிமாவை ஒரு தொழில்துறையாக வளர்ச்சியடைய செய்ய வேண்டும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மன்றம் ஆகியவற்றிற்கான பணிப்பாளர் சபையை நியமிக்கும் நிகழ்வு, ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்
மேலும், தேசிய திரைப்படக் கழகம் நவீன காலத்திற்கு ஏற்றவாறு புதுப்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டதோடு தனியார் துறையுடன் போட்டியிட்டு வெற்றிபெற வேண்டும் என்றும் விஜித ஹேரத் கூறியுள்ளார்.
இலங்கை மன்றம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், கடந்த காலங்களில் இலங்கை மன்றத்தில் காணப்பட்ட பலவீனங்களை தடுத்து, தற்போதைய அதிகாரிகள் நேரடியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நேற்றையதினம் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக அரசு கரும மொழிகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் டபிள்யூ. ப்ரின்ஸ் சேனாதீர நியமிக்கப்பட்டார்.