மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் 4 வயது குழந்தையுடன் தாய் ஒருவர் இன்று (16); திகதி வியாழக்கிழமை (16) மாலை 4 மணியளவில் குதித்துள்ளார்.
இதன் போது தாய் உயிருடன் மீட்கப்பட்டுள்ள போதிலும், 4 வயது பிள்ளையைத் தேடும் பணி தொடர்கின்றது.
அக்கரபத்தனை எல்பியன் தோட்டத்தை பிறப்பிடமாக கொண்ட இப்பெண் தலவாக்கலை தெவிசிரிபுற பிரதேசத்தில் வாழ்ந்து வந்துள்ளார்.
கனவனை விட்டு 7 வருடங்களாக பிரிந்து இன்னொருவருடன் வாழ்ந்து வந்த இவர், தனது குழந்தையுடன் நீர்த்தேக்கத்தில் குதித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
குறித்த பெண் நீர்த்தேக்கத்தில் தத்தளித்துக் கொண்டிருந்ததை பார்த்த பிரதேச மக்கள் அவரைக் காப்பாற்றி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மீட்கப்பட்ட தாய் சிகிச்சைக்காக லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்>தமிழ் மொழிக்கு அமெரிக்க காங்கிரஸ் கொடுத்துள்ள முக்கியத்துவம்!