வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் நாளைய தினம் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
அதற்கமைய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும்போது, தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைத்துக் கொள்வதற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு,வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கோரியுள்ளது.
இதையும் படியுங்கள்>தந்தை செல்வாவின் நினைவுச்சதுக்கம் அமைந்துள்ள பகுதியில் தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் சிரமதான பணிகள்!
https://www.youtube.com/@pathivunews/videos