அண்மையில் காசா எல்லையில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டார்.
நீண்ட தேடலுக்கு பின் தெற்கு காசா எல்லையில் வைத்து ஹமாஸ் தலைவர் யாஹ்ஸா சின்வார் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்தது.
சின்வார் கொலை ஹமாஸ் இயக்கத்தின் வீழ்ச்சிக்கான ஆரம்பம் என இஸ்ரேல் பிரதமர் தெரிவித்தார்.
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொலை செய்யப்பட முன்னர் ஒளிப்பதிவு செய்யப்பட்ட கடைசி விநாடிகளின் ஒளிபதிவைஇஸ்ரேல் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு துறையின் உத்தியோக்ப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள ஒளிபப்பதிவு காண்பிக்கும் யாஹ்யா சின்வாரின் இறுதி நேரம் டிரோன் ஒளிப்பதிவு கருவில் பதிவு செய்யப்பட்டவை ஆகும்.
கொலை செய்ய்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேல் மீது நடத்திய மிகக் கொடூர தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜூலை மாதம் ஹமாஸ் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட பின் யாஹ்யா சின்வார் ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.