கிரிகெட் போட்டிகளில் சம்பாதித்துவிட்டேன்.
எனவே அரசியலில் வந்து பணம் உழைக்கும் தேவை எனக்குக் இல்லையென ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் களுத்துரை வேட்பாளர் திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது’
இப்போது புதியவர் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் வாகன பெர்மிட் உள்ளிட்ட சலுகைகளை இல்லாது செய்துள்ளார்.
நாம் விளையாட்டுப் போட்டிகளில் சம்பாதித்துவிட்டோம்.
எனவே அரசியலில் பணம் சம்பாதிக்க வேண்டியத் தேவை எமக்கு கிடையாது.
ஐக்கிய ஜனநாயகக் குரல் எனும் புதிய கட்சி ஊடாக நான் அரசியலுக்கு வந்ததையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்.
இது தூய்மையானதொரு கட்சியாகும்.
ஏனையக் கட்சிகளின் ஊடாக அரசியலுக்குள் நான் வந்திருந்தால் ஊழல் மற்றும் மோசடியாளர்களுடன் இணைய வேண்டிய நிர்ப்பந்தம் வந்திருக்கும்
எமது கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க ஊழல்- மோசடிகளுக்கு எதிராக தொடர்ந்தும் குரல் கொடுத்தவர்
இவ்வாறனவருடன் இணைந்து அரசியல் செய்வதையிட்டு பெருமையடைவதாக திலகரத்ன டில்ஷான் தெரிவித்துள்ளார்.