திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலக பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று (03) பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் நெறியாழ்கையின் கீழ் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதியமைச்சரும்,
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவருமான அருண் ஹேமச்சந்திரா தலைமையில் இடம்பெற்றது.
இதில் தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் உள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள், குறைபாடுகள், மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்பட்டன.
குறிப்பாக மனித யானை மோதல், வீதி அபிவிருத்தி , இயற்கை அனர்த்தத்தின் போதான வடிகான் நிலவரம், சட்ட விரோத மண் அகழ்வு, விவசாயிகளுக்கான பசளை , கல்வி சுகாதாரம் என பல முக்கிய தீர்மானங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
குறித்த கூட்டத்தில் தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதி செயலாளர் இரா.பிரசாந்தன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் உட்பட திணைக்கள பொறுப்பதிகாரிகள் துறைசார் அரசாங்க உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள்>கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்- மாகாண ஒருங்கிணைப்பு மையம் யாழில் திறப்பு!