Saturday, January 4, 2025
Homeஉள்ளூர்மதுபோதையில் வாகனம் செலுத்திய 529 சாரதிகள் கைது!

மதுபோதையில் வாகனம் செலுத்திய 529 சாரதிகள் கைது!

நேற்று (01) காலை 06 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில்,

விசேட போக்குவரத்து நடவடிக்கையின் போது மது போதையில் வாகனம் செலுத்தியமைக்காக 529 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது விசேட போக்குவரத்து கண்காணிப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட உட்பட்ச எண்ணிக்கை ஆகும்.

மேலும் இதன்போது, போக்குவரத்து விதிகளை மீறியமைக்காக சட்டம் அமுல்படுத்தப்பட்ட சாரதிகளின் மொத்த எண்ணிக்கை 7,264 ஆகும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மது போதையில் வாகனம் செலுத்திய 529 சாரதிகளுக்கும், கவனக்குறைவாகவும் ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய 57 சாரதிகளுக்கும், அதிவேகமாக வாகனம் செலுத்திய 54 சாரதிகளுக்கும்,

போக்குவரத்து விதிகளை மீறிய 1057 சாரதிகளுக்கும், உரிமத்தை மீறிய 614 சாரதிகளுக்கும் ஏனைய போக்குவரத்து விதிகளை மீறிய 4,953 சாரதிகளுக்கு எதிராகவும் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

பண்டிகைக் காலங்களில் வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய நாடு முழுவதையும் உள்ளடக்கும் வகையில் கடந்த மாதம் 23 ஆம் திகதி முதல் இந்த விசேட போக்குவரத்து நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

இதன்படி, இந்த விசேட போக்குவரத்து நடவடிக்கை தொடர்ந்தும் அமுல்படுத்தப்படவுள்ளதுடன், மதுபோதையில் வாகனம் செலுத்த வேண்டாம் எனவும், போக்குவரத்து விதிமீறல்கள் உள்ளிட்ட ஏனைய போக்குவரத்து விதிகளை மீற வேண்டாம் எனவும் இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்>கிளி.கணேசபுரம் சனசமூக நிலையத்தின் மர நடுகையும், மாணவர்களின் கற்றலுக்கான ஊக்குவிப்பு நிகழ்வு!

https://www.youtube.com/@pathivunews/videos

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments