Saturday, January 4, 2025
Homeஉள்ளூர்கிளி.கணேசபுரம் சனசமூக நிலையத்தின் மர நடுகையும், மாணவர்களின் கற்றலுக்கான ஊக்குவிப்பு நிகழ்வு!

கிளி.கணேசபுரம் சனசமூக நிலையத்தின் மர நடுகையும், மாணவர்களின் கற்றலுக்கான ஊக்குவிப்பு நிகழ்வு!

கிளிநொச்சி கணேசபுரம் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில், பசுமைச் சூழலை உருவாக்கலும் மாணவர்களின் கற்றலுக்கான ஊக்குவிப்பு நிகழ்வு நேற்று(01.01.2025) நடைபெற்றது.

கணேசபுரம் சனசமூக நிலைய தலைவர் Lion இராசதுரை ஜெயசுதர்சன் அவர்களின் தலைமையில், சனசமூக முன்றலில் காலை 11.00 மணிக்கு குறித்த நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அவர்களும், சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் கௌரவ விருந்தினர்களாக கிளிநொச்சி மாவட்ட கொமர்ஷல் வங்கியின் முகாமையாளர் A.T அரவிந்தன், கரைச்சி பிரதேச சபை செயலாளர் செ.செல்லக்குமார், உள்ளூராட்சி திணைக்களத்தின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் நா.சோமசுந்தரராஜன், கரைச்சி பிரதேச சபை உப அலுவலக பொறுப்பதிகாரி ப.நவரட்ணம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது வீதியின் இரு பக்கங்களும் நிழல்தரு மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டதுடன், கழகங்கள் மற்றும் கிராம மக்களுக்கு பயன்தரு மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் புலமை பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர சாதாரண மற்றும் உயர்தர பரீட்சைகளில் சித்தி அடைந்த, கல்வியல் கல்லூரிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும் கௌரவிக்கப்பட்டதுடன் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

கொமர்ஷியல் வங்கியின் ‘நிலைப்பெறுதகு எதிர்காலத்தை நோக்கி’ எனும் தொனிப்பொருளின் கீழ் இலங்கை முழுவதும் ஒரு லட்சம் மரங்களை நடும் தேசிய திட்டத்தின் கீழ் இந்நிகழ்விற்காக 1000 மரக்கன்றுகள் அனுசரணையாக வழங்கப்பட்டன.

குறித்த நிகழ்வில் கணேசபுரம் கிராம மட்ட உத்தியோகத்தர்கள், ஆலய பூசகர், கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர், இலங்கை செஞ்சிலுவை சங்க தொண்டர்கள், லயன்ஸ் கழக அங்கத்தவர்கள், கிராம மட்ட அமைப்புகளின் அங்கத்தவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
இதையும் படியுங்கள்>மக்களுக்கு சொன்னதை செய்யுங்கள் அநுரவுக்கு,நாமல் தெரிவிப்பு

https://www.youtube.com/@pathivunews/videos

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments