ஆம் ஆத்மி தலைவர் கேஜ்ரிவால் அவரது வீட்டில் தங்கத்தில் செய்யப்பட்ட கழிப்பறையைப் பயன்படுத்துவதாக டெல்லி பாஜகவினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
தில்லி முன்னாள் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கேஜரிவால் கோவிட் தொற்று காலத்தில் வளர்ச்சித் திட்டங்கள் முடங்கியிருந்த போது சீஷ் மஹால் எனப்படும் தனது ஆடம்பர இல்லத்தைப் புதுப்பிக்க பல கோடி ருபாய் செலவு செய்ததாக பாஜகவினரால் முன்னர் சர்ச்சை எழுப்பப்பட்டது.
இந்த நிலையில் கேஜரிவால் தனது வீட்டில் தங்க முலாம் பூசிய கழிப்பறையைப் பயன்படுத்துவதாக தில்லி பாஜக தலைவர் ஆர்பி சிங் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய அவர், ‘இதுபோன்ற தங்க முலாம் பூசிய கழிப்பறையை கேஜரிவால் தனது வீட்டில் பயன்படுத்துகிறார்.
56 கோடி மதிப்புள்ள அவரது சீஷ் மஹால் எனப்படும் ஆடம்பர வீட்டில் இதுபோல 12 கழிப்பறைகள் உள்ளன.
இதன் மதிப்பு மட்டுமே 1.44 கோடி’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்
ஆத்துடன் ‘அவர்கள் இலவசங்களைக் கொடுத்து உங்கள் வாக்குகளைப் பெறுகிறார்கள்.
அவர்களின் தவறுகள் குறித்து நாங்கள் மக்களிடம் சொல்கிறோம்.
இங்குள்ள கழிப்பறைகளின் நிலையைப் பாருங்கள்.
பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததும் நல்ல கழிப்பறை, குளியலறை கட்டித் தருவோம்.
இலவசங்களின் பெயரில் தில்லியை சூறையாட விடக்கூடாது’ என்றும் ஆர்பி சிங் மேலும் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்>உக்ரைன் மீது தொடர் தாக்குதலை மேற்கொணடுள்ள ரஷியா!