அமெரிக்காவில் கடந்த மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார்.
அவர் (ஜனவரி) மாதம் 20-ந்தேதி ஜனாதிபதியாக பதவி ஏற்க உள்ளார்.
இவர் மீது ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளது.
ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு அவருக்கு எதிரான 2 வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டது.
கடந்த 1996-ம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள ஒரு நிறுவனம் ஒன்றில் டிரம்ப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என பெண் எழுத்தாளரான ஜீன் கரோல் முறைப்பாடு தெரிவித்தார்.
டிரம்புக்கு எதிராக அவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் அவதூறு வழக்கினை தொடர்ந்தார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டினை டிரம்ப் மறுத்து வந்தார்.
இந்த வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ; ஆஜராகாமல் இருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த மன்ஹாட்டன் நீதிமன்றம் டிரம்புக்கு 120 கோடி இலங்கை ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்ளித்தார்
இந்த தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் நியூயார்க் பெடரல் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுதாக்கல் செய்தார்.
இதனை 3 நீதிபதிகள் கொண்ட குழு விசாரித்தது.
இதில் மன்ஹாட்டன் நீதிமன்றம் விதித்த 120 கோடி அபராதத்தை பெடரல் நீதிமன்றம் உறுதி செய்தது.
அடுத்த மாதம் ஜனாதிபதியாக பதவி ஏற்க இருக்கும் சூழ்நிலையில் டிரம்புக்கு எதிராக வந்துள்ள இந்த தீர்ப்பு அவருக்கு பின்னடைவாக பார்க்கப்படுவதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதையும் படியுங்கள்>பிரிஸ்பேன் ஓபின் டென்னிஸ்: சபலென்கா 2வது சுற்றுக்கு தகுதி!