Saturday, January 4, 2025
Homeஉள்ளூர்வடக்கு கடற்தொழில் இணையமும்,தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் சந்திப்பு

வடக்கு கடற்தொழில் இணையமும்,தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமும் சந்திப்பு

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்திற்கும் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்திற்கும் இடையிலான சந்திப்பு நேற்று(31.12.2024) காலை யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றது.

இதன் பொழுது கடற்றொழில் அமைச்சினால் முன்மொழியப்படவுள்ள புதிய சட்டமூலத்தினை இடைநிறுத்தல், தமிழக அரசியல் தலமைகளுடன் வடகிழக்கு தமிழ் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை முன்னெடுப்பதனை வலியுறுத்தல் ,

தேசிய மக்கள் சக்தியினால் மீனவர் பிரச்சினை தொடர்பில் கோரப்பட்ட கால அவகாசம் ஜனவரி மாதத்துடன் நிறைவடைதல்,

2025 வடமாகாண மீனவர்களின் வாழ்வியல் செயற்திட்டங்கள் , ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினை சந்திப்பதற்கான தீர்மானம்

மற்றும் கடற்றொழில் அமைச்சரினை 4 ஆம் திகதி சந்தித்தல் ஆகிய விடயங்கள் இதன் பொழுது கலந்துரையாடப்பட்டது.

இதன் பொழுது தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் ஏமன் குமார வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் ஜோசப் பிரான்சிஸ்,

இணையத்தின் செயலாளர் மொகமட் ஆலம் ,இணையத்தின் பொருளாளர் ரவீந்திரன் பிரியா , ஊடக பேச்சாளர் அன்னராசா , முல்லைத்தீவு,மன்னார், கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாண மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இதையும் படியுங்கள்>நாங்கள் பிரிவினைவாதிகள் அல்ல – இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர்!

https://www.youtube.com/@pathivunews/videos

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments