Thursday, January 2, 2025
Homeஉலகம்கமால் அத்வான் மருத்துவமனையின் இயக்குநர் இஸ்ரேலிய படையினரால் கைது!

கமால் அத்வான் மருத்துவமனையின் இயக்குநர் இஸ்ரேலிய படையினரால் கைது!

கமால் அத்வான் மருத்துவமனை மீது இஸ்ரேலிய படையினர் தாக்குதல் நடத்தியதுடன் மருத்துர் ஒருவரை கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட மருத்துவரான அபு சபியாவை எவரும் இதுவரை காணவில்லை.
ஹமாஸ் உறுப்பினர் என சந்தேகிப்பதால் அவரை தடுத்துவைத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

மருத்துவமனை ஹமாசின் கட்டளை பீடமாக செயற்பட்டது என இஸ்ரேல் தெரிவித்துள்ள போதிலும் அதற்கான ஆதாரங்களை வெளியிடவில்லை.

இதேவேளை கைதுசெய்யப்பட்ட வைத்தியர் எங்கிருக்கின்றார் என்பதற்கான விபரங்களை வெளியிடுமாறு அவரது குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேவேளை வைத்தியரும் மருத்துவமனையில் கைதுசெய்யப்பட்ட ஏனையவர்களும் காசா எல்லையில் உள்ள இஸ்ரேலின் நெகெவ் பாலைவனத்தில் உள்ள இராணுவ முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என விடுதலை செய்யப்பட்டுள்ள கைதிகள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவரை தாங்கள் பார்த்ததாக வார இறுதியில் விடுதலை செய்யப்பட்டுள்ள இரண்டு கைதிகள் தெரிவித்துள்ளனர் இதேவேளை அவரது பெயர் வாசிக்கப்பட்டதை கேட்டதாக விடுதலை செய்யப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்>4 ஆவது டெஸ்ட் 184 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா!

https://www.youtube.com/@pathivunews/videos

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments