நியூ ஆர்லியன்ஸில் மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில் குறைந்தது 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இதில் 30 பேர் வரை காயமடைந்தனர்.
விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த நபர் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மதியம் சுமார் 3:15 மணியளவில் நியூ ஆர்லியன்ஸில் உள்ள போர்பன் ஸ்ட்ரீட் மற்றும் ஐபர்வில்லி சந்திப்பிற்கு அருகே கார் மக்கள் கூட்டத்தில் புகுந்தது.
சம்பவத்தின் போது அங்கிருந்தவர்களில் கூற்றுப்படி, போர்பன் தெருவில் ஒரு டிரக் அதிவேகமாக மக்கள் மீது மோதியது.
இதைத் தொடர்ந்து, ஒரு ஓட்டுநர் வாகனத்தை விட்டு வெளியேறி சுடத் தொடங்கினார்,
ஆதனை தொடர்ந்து போலீசார் திருப்பிச் சுட்டனர் என்று ஊடீளு செய்தி வெளியிட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதல் தாரிகள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
சம்பவம் நடந்த போர்பன் தெரு, நியூ ஆர்லியன்ஸின் பிரபல சுற்றுலாத் தலமாகும்.
போர்பன் தெருவில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஆயிரக்கணக்கானோர் வந்ததாக கூறப்படுகிறது.