ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மரியாதை செலுத்தும் வகையில், சீன விஜயத்தின் போது இலங்கை முன்வைக்க விரும்பும் எந்தவொரு புதிய திட்டங்களுக்கும் முழு அளவிலான ஒத்துழைப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது
இந் நிலையில், சீனாவிடம் முன்வைக்க உத்தேசிக்கப்படுகின்ற புதிய திட்டங்கள் குறித்து அரசாங்கத்துக்குள் விசேட பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 12ஆம் திகதி சீனா செல்லவுள்ளார்.
அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியா, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஜனாதிபதியின் சீன விஜயத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன.
இதற்குக் காரணம், சீனாவை நோக்கிய ஒரு சார்பு தன்மை அரசாங்கத்திடமிருந்து வெளிப்பட தொடங்கியுள்ளதாக கொழும்பை தளமாக கொண்ட மேற்குலக இராஜதந்திர தகவல்கள் சந்தேகங்களை வெளியிட்டுள்ளன.
அது மாத்திரம் அன்றி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் பின்னரே அரசாங்கத்தின் வெளிவிவகார கொள்கை குறித்து ஒரு தெளிவான பார்வையை அனைவராலும் உணர முடியும் என தெரிவிக்கப்படுகின்றது