இலங்கையில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கக் கூடிய வகையில் 08 தொழிற்சங்கங்களுக்கு இலவச அனுமதி சீட்டுகளை வழங்கியதனூடாக, ரயில்வே திணைக்களத்துக்கும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கும் 2023 ஆம் ஆண்டு சுமார் 07கோடி ரூபா நட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது
2023 ஆம் ஆண்டு ஸ்தாபனக்கோவைக்கு முரணாக இந்த இலவச அனுமதி சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
08 தொழிற்சங்கங்களுக்கு 138 (ழுpநn குசநந Pயளள) இலவச அனுமதிப்பத்திரங்களை வழங்கியதன் மூலம், 2023ஆம் ஆண்டு மட்டும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சுமார் நான்கரை கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளது.
இதனை அரசு எவ்வாறு மீளப் பெறப்போகின்றது ?