(அக்டோபர் 12, 2024 சனிக் கிழமை) இன்று சந்திரன் பகவான் மகரம் ராசியில் உத்திராடம், திருவோணம் நட்சத்திரத்தில்
இன்றைய ராசிபலன் 5.10. 2024, குரோதி வருடம் புரட்டாசி 26, சனிக் கிழமை, சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் உள்ள திருவாதிரை,புனர்பூசம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். சுயநலம் மிக்கவர்களிடம் கவனமாக இருக்கவும். பணியிடத்தில் உங்களுக்கு சாதகமான சூழலும், மாற்றமும் நடக்கும். எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. உங்கள் நிதி நிர்வாகத்தில் கட்டுப்பாடு தேவைப்படும் நாள். பிள்ளைகளின் முடிவு ஏமாற்றம் அடைய செய்யும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று சமய காரியங்களில் ஆர்வத்துடன் பங்கேற்பீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவையே நிறைவேற்ற உங்களால் முடிந்த முயற்சியை செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சில சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மனைவியின் ஆதரவும், அன்பும் கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட பொருட்கள் அல்லது சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. உங்களின் வாழ்வாதாரம் தொடர்பான வேலைகளில் அதிகபட்ச வெற்றியை பெறுவீர்கள். அரசு வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு திடீர் பணவரவால் நன்மைகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகளை முடிக்க முடியும். வியாபாரத்தில் புதிய திட்டங்கள் முடிப்பதில் வேகம் பெறும். எந்த முடிவையும் கவனமாகவும் நிதானமாகவும் எடுக்கவும். இன்று குடும்பத்துடன் கோயில், புனித ஸ்தலத்திற்குச் சென்று வருவீர்கள்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று அரசியல் மற்றும் அரசு பணியில் உள்ளவர்களுக்கு நல்ல வெற்றிகள் கிடைக்கும். இன்று உத்தியோகஸ்தர்களுக்கு அதிக வேலைப்பளு ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களுக்காக நேரம் ஒதுக்க முடியாத சூழல் இருக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று வேலை, வியாபாரம் என உங்களின் போட்டியாளர்களுக்கு அதிக போட்டியை கொடுப்பீர்கள். எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. திருமண வாழ்க்கையில் இனிமையான சூழ்நிலையை அனுபவிப்பீர்கள். மாணவர்களின் உயர்கல்வி முயற்சி வெற்றி அடையும். உங்கள் பிள்ளைகளிடமிருந்து சில நல்ல செய்திகளைக் கேட்கலாம். நீங்கள் இன்று ஒரு முக்கியமான முடிவை எடுக்கும் விஷயத்தில் உங்கள் மனைவியின் ஆதரவு கிடைக்கும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று கல்வி மற்றும் போட்டித் தேர்வுக்கு தயாராகக்கூடிய நபர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். இன்று வியாபாரத்தில் புதிய வருமானம் கிடைக்கும். இன்று அதிகமாக அலைச்சல் இருக்கும். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தக்கூடும். காதல் வாழ்க்கையில் கவனம் தேவை. மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உத்தியோகத்தில் உங்கள் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும், இல்லையெனில் பாதகமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். உங்களது சக ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று உங்களின் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடைந்து புகழ் உயரும். மாலையில் குடும்ப உறவினர்களைச் சந்தித்துப் பேசுவீர்கள்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு பரபரப்பான நாளாக இருக்கும். இன்று நீங்கள் எந்த முடிவையும் எடுத்தால், அது உங்களுக்கு தனிப்பட்டதாக இருந்தாலும் அல்லது வியாபாரம் சம்பந்தப்பட்டதாக இருந்தாலும் அது உங்களுக்கு மகத்தான பலன்களைத் தரும். இன்று வெற்றி பெறுவீர்கள். உறவினருடன் பணப் பரிவர்த்தனை செய்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில் அது உங்கள் உறவில் விரிசலை ஏற்படுத்தும்.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று முடிக்க வேண்டிய முக்கிய வேலைகளை செய்து முடிப்பதில் தாமதம் வேண்டாம். இன்று மாணவர்கள் படிப்பில் வெற்றி பெறுவார்கள். நிதி நிலை முன்பை விட வலுவாக இருக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்கள், லட்சியங்களையும் எளிதாக நிறைவேற்ற முடியும். இன்று நீங்கள் பயணங்களிலும், வாகன பயன்பாட்டில் கவனமாக இருக்கவும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உடல் வலிகளால் நீங்கள் சிரமப்படுவீர்கள். இன்று சொத்து வாங்கும் அல்லது விற்கும் விஷயத்தில் கவனமாக இருக்கவும். ஆவணங்களைச் சரிபார்க்கவும். இன்று உங்கள் பெற்றோருடன் சில முக்கியமான குடும்பப் பிரச்சனைகளைப் பற்றி விவாதிப்பீர்கள். இன்று நீங்கள் உங்கள் மனைவியின் முழு ஆதரவையும் தோழமையையும் பெறுவீர்கள்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இன்று மாலை, நீங்கள் உங்கள் நண்பர்களுடன் விருந்து, விழாக்களில் பங்கேற்பீர்கள். உங்கள் வணிகத்தில் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும். மாணவர்கள் மனச் சுமையிலிருந்து விடுபடலாம். வியாபாரத்தில் வளர்ச்சி இருக்கும் மற்றும் முன்னேற்றம் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.உங்கள் நிதி நிலையும் வலுவாக இருக்கும்.