Monday, December 23, 2024
Homeஉள்ளூர்வடக்கில் ஒரு மாதத்துக்குள் அரிசியின் விலை குறைவடையும்!

வடக்கில் ஒரு மாதத்துக்குள் அரிசியின் விலை குறைவடையும்!

வடக்கு மாகாணத்தில் இன்னும் ஒரு மாதத்துக்குள் அரிசியின் விலை நிச்சயம் குறைவடையும் என வடக்கு மாகாணத்திலுள்ள பிரதான அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடற்றொழில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அமைச்சர் இ.சந்திரசேகரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகிய இருவரதும் தலைமையில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண அரிசி ஆலை உரிமையாளர்களுடனான சந்திப்பு நடைபெற்றது.

இதன்போது அரிசியின் விலையில் ஏற்பட்ட சடுதியான அதிகரிப்பால் ஏழைகள் கொள்வனவு செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாக குறிப்பிட்டதுடன்,

அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அரிசியை விற்பனை செய்யக்கூடிய நிலைமை இல்லாதிருப்பதற்கான காரணத்தைக் கேட்டறிந்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியையும் நிர்ணய விலையில் விற்பனை செய்யாமல், அவற்றின் ‘லேபல்கள்’ மாற்றப்பட்டு அதிகரிக்கப்பட்ட விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அரிசி ஆலை உரிமையாளர்களால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு மாவட்ட நுகர்வோர் அதிகார சபைக்கு ஆளுநர் பணிப்புரை விடுத்தார்.

இங்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் இ.சந்திரசேகரன்,
அரிசியை வைத்துக்கொண்டு தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டமை எல்லோருக்கும் தெரியும் எனவும், அவ்வாறான நிலைமை தொடரக்கூடாது என்பதில் அரசாங்கம் கவனத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அரிசி ஆலை உரிமையாளர்களை நஷ்டத்தில் வீழ்த்துவதையோ மக்களை கஷ்டத்தில் வீழ்த்துவதையோ அரசு விரும்பவில்லை என அவர் தெரிவித்தார்.

அத்துடன் அரசாங்கம் எதிர்காலத்தில் 3 இடங்களில் புதிதாக அரிசி ஆலையை அமைப்பதற்கு திட்டமிடுவதாகவும் குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களில் நெல்லைக் கொள்வனவு செய்தபோது நீங்கள் அதை அரிசியாக்கும்போது நிர்ணயமாகும் விலையை விட தற்போது அதிக விலைக்கே விற்பனை செய்வதாகவும் தெரிவித்தார்.

அரிசி ஆலை உரிமையாளர்களை பழிவாங்குவதாக நினைக்க வேண்டாம் என்றும் அதிகமான ஏழைகள் வாழும் மாகாணம் எமது மாகாணம் என்பதைக் கவனத்தில் எடுத்து சமூகப்பொறுப்புடன் செயற்படுமாறும் வலியுறுத்தினார்.

இதையும் படியுங்கள்>மாவை சேனாதிராஜா முற்திகதியிடப்பட்ட கள்ளக் கடிதம் எழுதியுள்ளார்- சுமந்திரன்

https://www.youtube.com/shorts/-8yCm3GMY_w?feature=share

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments