Monday, December 23, 2024
Homeஉள்ளூர்ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை!

ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை!

சட்டத்தின் ஆட்சியையும் கௌரவத்தையும் மீட்டெடுக்க விரைவான சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துமாறு ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் பெசில் பெர்னாண்டோ எழுத்து மூலம் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, இந்நாட்டில் சட்ட சீர்திருத்த செயற்பாடுகளை முன்னெடுப்பதில் உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டிய முக்கியமான மூன்று விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

உயர் நீதிமன்றங்களில் கடுமையான குற்றவியல் வழக்குகளை தினசரி விசாரணை செய்தல், இலஞ்சம் மற்றும் ஊழலை கட்டுப்படுத்தும் சட்டங்களை அறிமுகம் செய்தல், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சீர்திருத்தம் ஆகியன இந்த விடயங்களில் உள்ளடங்குவதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதையும் படியுங்கள்>வடக்கில் ஒரு மாதத்துக்குள் அரிசியின் விலை குறைவடையும்!

https://www.youtube.com/shorts/gKQ90mvsAYw?feature=share

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments