Monday, December 23, 2024
Homeஇந்தியாசென்னையில் புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி

சென்னையில் புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு பேரணி

சென்னையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தினரால் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இக்கண்காட்சி பொதுவாக ஆங்கிலப் புத்தாண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ஜனவரி மாதம் நடைபெறும்.

தமிழகம் முழுவதும் உள்ள வெளியீட்டாளர்கள் தனித்தனி ஸ்டால்களில் தங்கள் பதிப்பக புத்தகங்களை காட்சிப்படுத்துவர்.

கண்காட்சியோடு சேர்த்து சொற்பொழிவு, பேச்சாளர்களின் சிறப்பு நிகழ்வுகள் உள்ளிட்டவையுடன் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

1977 ஆம் ஆண்டு முதல் புத்தக கண்காட்சி நடத்தப்பட்ட நிலையில் அடுத்ததாக 48 வது புத்தக கண்காட்சி நடத்தப்பட உள்ளது.

அதன்படி, புத்தக கண்காட்சியானது முன்கூட்டியே வரும் டிசம்பர் 27-ம் தேதி தொடங்க உள்ளது.

இந்நிலையில், புத்தக வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிலையில், சென்னையில்  பேரணி நடைபெற்றது.


இதனை, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத் தலைவர் சேது சொக்கலிங்கம் கொடியசைத்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

பேரணியில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பாடசாலை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னை மேயர் பிரியா ஆகியோர் பங்கேற்றனர்.


அதன்படி நந்தனம் ஆவின் பாலகம் அருகில் இருந்து ஒய்எம்சிஏ மைதானம் வரை பேரணி நடைபெற்றது.
இதில் 500க்கும் மேற்பட்ட பாடசாலை கல்லூரி மாணவர்கள் என பலரும் பங்கேற்றனர்.

இதையும் படியுங்கள்>ரஷ்ய போரில் ஈடுபடுத்தப்பட்ட தமிழ் இளைஞர்களை மீட்க கோரிக்கை

https://www.youtube.com/@pathivunews/videos

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments