அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது, நாட்டில் இந்திய எண்ணெய் குழாய்களை அமைப்பது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்படவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பில் அறிவிப்பதற்காக அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (20) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.