Monday, December 23, 2024
Homeசெய்திகள்வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்த அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி.

வெற்றி தோல்வியின்றி முடிவுக்கு வந்த அவுஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி.

ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை கொண்டதாகும்.

இந்த தொடரின் முதல் 3 போட்டிகள் முடிவில் ஒரு போட்டியில் இந்தியாவும் ஒரு போட்டியில் ஆஸ்திரேலியாவும் ஒரு போட்டி சம நிலையிலும் முடிந்துள்ளது.

இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்த போட்டி சமநிலையானதால்இந்திய அணி, கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வென்று, 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி ஆக வேண்டும்.

2-2 என சம நிலையடைந்தாலும் கூட இந்திய அணியின் இறுதிப்போட்டி வாய்ப்பு குறைந்துவிடும்.

அதாவது, 2-2 என்ற கணக்கில், தொடர் சமன் ஆனால், அடுத்து ஆஸ்திரேலியா, இலங்கை இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முடிவுகளை எதிர்நோக்கி, இந்தியா காத்திருக்கும் நிலை ஏற்படும்.

2-2 என சமன் ஆனால், இலங்கை அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கட்டாயமாக ஒரு வெற்றியைப் பெற்றாக வேண்டும்.

இந்த தொடர் இலங்கை மண்ணில்தான் நடைபெறும்.

ஒருவேளை, ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தினால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடுவார்கள்.

இதையும் படியுங்கள்>வானு வாட்டு தீவு நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம்: 14 பேர் பலி!

 

https://www.youtube.com/@pathivunews

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments