அனைத்து சீன பெண்கள் சம்மேளனத்தின் ACWF) துணைத் தலைவியான சாங் டோங்மேய், பிரதமர் ஹரிணி அமரசூரியவை அவரது அலுவலகத்தில் சந்தித்து, பெண்கள் வலுவூட்டல் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்
சாங் டோங்மேய் மற்றும் அவரது தூதுக்குழுவினரை வரவேற்ற பிரதமர் அமரசூரிய, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நீடித்த நட்புறவைப் பாராட்டியுள்ளார்
பெண்களின் சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதாரப் பங்கேற்பு ஆகியவற்றில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகளை மையமாகக் கொண்டே இக் கலந்துரையாடல் நடைப்பெற்றுள்ளது
இதில் இலங்கைக்கான சீனத் தூதுவர் உட்பட இலங்கை சீனத் தூதரகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் இலங்கைக் குழுவில் பிரதமரின் செயலாளர்உட்பட பலர் கலந்துக்கொண்டனர்