அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகளில் பகல் சேமிப்பு நேரம் (னுயலடiபாவ ளுயஎiபெ வுiஅந-னுளுவு) என்ற முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நீண்ட கோடைகாலங்களில் பகல்நேரத்தை அதிகரிக்க ‘பகல் சேமிப்பு நேரம்’ என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அதாவது கோடைக்காலம் துவங்கும்போது கடிகாரங்களில் 1 மணிநேரத்தை முன்னோக்கி நகர்த்தி வைப்பர்.
இதன் மூலம் அதிகமான பகல் நேரம் கிடைக்கும்.
பின்னர் கோடைகாலம் முடியும்போது கடிகாரங்களில் 1 மணிநேரத்தை பின்னோக்கி நகர்த்தி வைப்பர்.
இதன்படி அமெரிக்காவில் மார்ச் மாதம் 2 ஆவது ஞாயிற்றுக்கிழமை கடிகாரத்தை 1 மணிநேரம் முன்னோக்கி நகர்த்தி வைப்பார்கள்.
பின்னர் நவம்பர் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று கடிகாரத்தில் 1 மணிநேரத்தை பின்னோக்கி நகர்த்தி வைப்பார்கள்.
முதல் உலகப் போரின் போது இந்த நடைமுறை உருவானது,
பின்னர் இரண்டாம் உலகப் போரில் ஆற்றலைச் சேமிப்பதற்காக மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
பின்னர் 1966 இல் சீரான நேரச் சட்டத்துடன் மேலும் தரப்படுத்தப்பட்டது.
அதே சமயம், ஹவாய் மற்றும் அரிசோனாவின் பெரும் பகுதி ‘பகல் சேமிப்பு நேரம்’ என்ற நடைமுறையை கடைப்பிடிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த ‘பகல் சேமிப்பு நேரம்’ முறைக்கு அமெரிக்காவில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
பகல் நேரங்களில் ஏற்படும் நேர மாறுதல்களால் தூக்கம் மற்றும் உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப் பகல் சேமிப்பு நேர முறையை அகற்றுவேன் என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், ‘குடியரசுக் கட்சி பகல் சேமிப்பு நேரத்தை அகற்ற சிறந்த முயற்சிகளை மேற்கொள்ளும்.
பகல் சேமிப்பு நேர முறை நமக்கு தேவையில்லை. அது சிரமமானது மற்றும் செலவு மிகுந்தது’ என்று பதிவிட்டுள்ளார்.