இலங்கை ஜனாதிபதி தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்திற்காக இந்தியாவை தெரிவு செய்திருப்பதன் மூலம் தெரிவிக்கப்படும் செய்தியை அங்கீகரிப்பது அவசியம் என இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரி அசோக் சஜ ஜன்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது,
மாறிவரும் புவிசார் அரசியல் நிலப்பரப்பில் இந்திய இலங்கை உறவுகள் பல திருப்பங்களையும் மாற்றங்களையும் கண்டுள்ளன.
இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமாரதிசநாயக்க டிசம்பர் 15ம் திகதி முதல் 17ம் திகதி வரை புதுடில்லிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என இந்திய வெளிவிவகார அமைச்சு வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கையில் சமீபத்தில் நடந்துமுடிந்த ஜனாதிபதி தேர்தல் நாடாளுமன்ற தேர்தலிற்கு பின்னர் திசநாயக்க இந்தியாவிற்கு மேற்கொள்ளும் முதலாவது இருதரப்பு விஜயமாகும்.
இந்த விஜயம் இரு நாடுகளிற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதற்கு உறுதுணையாகயிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த விஜயம் இலங்கை 2022 பொருளாதார நெருக்கடியிலிருந்து இன்னமும் மீண்டுகொண்டிருக்கின்ற சூழலில் இடம்பெறுகின்றது.
இலங்கையில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவதாலும் இந்திய விஜயத்திற்கு பின்னர் திசநாயக்க சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்hர் என்பதாலும் இந்த விஜயம் முக்கியத்துவம் பெறுகின்றது.
இவை ஆரம்ப நாட்கள் என முன்னாள் இராஜதந்திரியும் அரசியல் கொள்கை விமர்சகருமான அசோக் சஜ்ஜன்ஹர் ஈடிவி பாரத்திற்கு தெரிவித்தார்.
மேலும் இலங்கையின் வெளிநாட்டு உறவுகளின் வளர்ச்சியடைந்து வரும் பாதையை உன்னிப்பாக அவதானிக்கவேண்டியதன் அவசியத்தை அவசியம் எனவும் தெரிவித்த அவர் எனினும் இலங்கை ஜனாதிபதி தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்திற்காக இந்தியாவை தெரிவு செய்திருப்பதன் மூலம் தெரிவிக்கப்படும் செய்தியை அங்கீகரிப்பது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
‘இந்த தலைவர்கள் ஒரு கருத்தொருமைப்பாட்டினை வெளிப்படுத்த விரும்பும்போது”
‘எங்களால் நேபாளில் இதனை காணமுடிகின்றது பல தடவை பதவி வகித்துள்ள கே.பி சர்மா தனது முதலாவது விஜயத்திற்கு சீனாவை தெரிவு செய்ததன் மூலம் சீனாவுடன் உறவுகளை வலுப்படுத்துவதற்கான சமிக்ஞையை வெளியிட்டார்’
இதேபோன்று நேபாளத்தில் முய்சு பதவியேற்றவேளை அவர் சீனா துருக்கி ஐக்கிய அரபுஇராச்சியம் ஆகியவற்றிற்கே முன்னுரிமை வழங்கினார்.
இறுதியாக அவர் இந்தியாவை நோக்கி கரங்களை நீட்டினார்’
இவ்வாறான செயற்பாடுகள் தெளிவான செய்தியை தெரிவிக்கின்றன,
இலங்கை ஜனாதிபதியிடமிருந்து வந்துள்ள செய்தி தவறானதல்ல.
இந்தியாவுடன் வலுவான சாதகமான உறவுகளை ஏற்படுத்துவது குறித்து அவர்கள் அர்ப்பணிப்புடன் உள்ளனர்.
இந்த கூட்டாண்மை அவர்கள் தொடர்ந்து முன்னேறுவதை நோக்கமாக கொண்ட ஒரு மைல்கல்லாகும் என சஜ்ஜஹன்கர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்>போரால் பாதிக்கப்பட்ட வட, கிழக்கை அபிவிருத்தி செய்ய விசேட நிதி தேவை- கஜேந்திரகுமார்