நாடளாவிய ரீதியில்; சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது
வீட்டுக்கு வரும் உரிய அதிகாரிகளுக்கு தேவையான தகவல்களை வழங்குமாறு கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கினிகே கேட்டுக் கொண்டுள்ளார்.
இதன்படி பிரதேச செயலாளரின் கையொப்பம் மற்றும் உத்தியோகபூர்வ அடையாள அட்டையுடன் வரும் உத்தியோகத்தருக்கு ஆதரவளிக்குமாறும் அவர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
‘நீங்கள் வீட்டில் இல்லை என்றால், வீட்டில் இருக்கும் நேரத்தை அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது
அத்துடன் தங்களின் தனிப்பட்ட தகவல்கள் எவ்விதத்திலும் வெளித்தரப்பினருக்கு கிடைக்காத வகையில் பார்த்துக் கொள்வது மக்களின் பொறுப்பு என கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கினிகே மேலும் தெரிவித்துள்ளார்