அமெரிக்க அமைதிப்படை தன்னார்வல ஆசிரியர்கள் கொழும்பில் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டனர்.
இவர்கள் இலங்கையில் மாணவர்களுக்கு ஆங்கில மொழியை கற்பிக்கவுள்ளனர்
;கடந்த செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு வருகை தந்த இத்தன்னார்வலர்களின் குழுவானது சிங்களம் அல்லது தமிழ், இலங்கையின் கலாச்சாரம் மற்றும் கற்பித்தல் முறைகள் ஆகியவிடயங்கள் தொடர்பாக இடம்பெற்ற 12 வாரகால தீவிர பயிற்சியினை நிறைவுசெய்துள்ளது
அவ்வாறு பயிற்றுவிக்கப்ட்டவர்கள் இலங்கை ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுடன் இணைந்து கிராமியப் பாடசாலைகளில் ஆங்கிலக் கல்வியினை மேம்படுத்துவதற்காக அவர்கள் எதிர் வரும் இரண்டு வருடங்களுக்கு மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலுள்ள பாடசாலைகளில் ஆங்கில மொழி ஆசிரியர்களாகப் பணியாற்றுவர்.
வடகிழக்கு மாகாண கிராமிய பாடசாலைகளில் அவ் அமெரிக்க ஆசிரியாகள் கற்பிக்க மாட்டார்கள் என தெரியவருகின்றது