யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிநெறி ஒன்று நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
அக்கறையுடன் கூடிய ஊடகம் எனும் தலைப்பில் நடைபெற்ற குறித்த பயிற்சிநெறியில் யாழ் மாவட்டத்தில் செயற்படும் சுமார் முப்பது வரையான ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
ஐக்கியநாடுகள் சிறுவர் நிதியம், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் நிதி அனுசரணையில் நீதித்துறைக்கான அனுசரணை திட்டத்தின் கீழ் குறித்த பயிற்சிப்பட்டறை நடைபெற்றுள்ளது.
இதையும் படியுங்கள்>திருகோணமலை மூதூரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
குறித்த பயிற்சிப்பட்டறையில் பயிற்றுவிப்பாளர்களாக ஊடக ஆசிரியர் பிறேமானந் மற்றும் சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
https://www.facebook.com/yarlc