Tuesday, December 24, 2024
Homeசெய்திகள்இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜப்பான் உதவி

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஜப்பான் உதவி

ஜப்பானின் தூதுவர் அகியோ இசொமதா, அவசரகால நிவாரணப் பொருட்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவிடம் கையளித்தார்.

நாட்டின் பல பகுதிகளில் அண்மையில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதற்காக இந்த பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று மாலை இடம்பெற்ற இந்த கையளிப்பு நிகழ்வில்,

இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் உதய ஹேரத் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (துஐஊயு) இலங்கை அலுவலக பிரதம பிரதிநிதி செட்சுயா யமடா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நன்கொடையாக வழங்கப்பட்ட பொருட்களில் 230 கூடாரங்கள், 1,300 மெத்தைகள் மற்றும் 30 தார்ப்பாய் சீட்கள் அடங்கும்.

இந்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கையில்,

தூதுவர் இசொமதா பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்ததுடன், இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் மிகவும் தேவைப்படும்போது அதற்கு ஆதரவாக நிற்பதில் ஜப்பானின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.

இந்த அனர்த்த நிலைமையின் போது, வடமாகாணத்தில் உள்ள மன்னார் மாவட்டத்திற்கு சுகாதார பொருட்கள் மற்றும் அத்தியாவசிய மருந்துகளை விநியோகித்ததன் மூலம் துஐஊயு வும் கைகோர்த்தது.

ஜப்பான் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து, இலங்கை அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு, தேவைப்படும் மக்களுக்கு பயனுள்ள உதவிகளை வழங்கி, இலங்கையின் பேரிடர் நிவாரணம் மற்றும் இடர் குறைப்பு திறன்களை மேம்படுத்துவதற்கு உதவுவதற்கான நீண்டகால அர்ப்பணிப் உறுதி செய்கிறது என தெரிவித்துள்ளாhர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments