கட்சி முழுமையாக மறுசீரமைக்கப்பட்டால் மட்டுமே ;கத்துடன் போட்டியிட முடியுமென ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (08) நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஐக்கிய மக்கள் சக்தி பொதுத்தேர்தலில் பெற்றுக் கொண்ட மொத்த வாக்கு வீதத்துக்கு அமைய ஐந்து தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைக்கப்பெற்றன.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயர் மாத்திரம் குறிப்பிடப்பட்;டதுமிகுதி தேசிய பட்டியல் ஆசனங்களை யாருக்கு வழங்குவது என்பது குறித்து தொடர்ச்சியாக பேச்சுவார்த்தை இடம்பெறுகிறது.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் பல அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. கூட்டணி என்ற அடிப்படையில் பல இணக்கப்பாடுகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
தேசிய பட்டியலுக்குள் உள்வாங்கப்பட வேண்டிய முக்கியமான நபர்களும் உள்ளனர்.
அத்துடன் மேலும் சிலர் தேசிய பட்டியலுக்காக கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆகவே இவ்விடயங்கள் அனைத்தையும் ஆராய வேண்டும்.
இவ்வாறான பின்னணியில் தேசிய பட்டியல் விவகாரத்தில் உறுதியான தீர்மானம் எடுப்பது கடினமாக உள்ளது.
ஆகவே தேசிய பட்டியல் குறித்து இதுவரை இறுதி தீர்மானம் ஏதும் எடுக்கப்படவில்லை.
மக்களின் மனங்களை வெல்ல கூடிய வகையில் கட்சியை மறுசீரமைக்க வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று ஒரு சிலர் வலியுறுத்துகிறார்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்தார்.