லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை இன்று தொடக்கம் 200,000 ஆக அதிகரிக்கப்படும் என வர்த்தக, வர்த்தக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அரசுக்கு சொந்தமான தோட்டங்களில் இருந்து பெறப்படும் தேங்காய்கள், சன நெரிசல் அதிகமாக உள்ள குறிப்பாக கொழும்பு உட்பட நகர்ப்புறங்களை இலக்கு வைத்து சதொச விற்பனை நிலையங்களில் தலா 130 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும்.
தேங்காய் தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணும் வகையில் லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நாளாந்தம் சுமார் 100000 தேங்காய்களை விற்பனை செய்யப்பட்டது.
சந்தையில் நிலவும் அரிசி மற்றும் தேங்காய் தட்டுப்பாட்டுக்கு வெகு விரைவில் தீர்வு காணப்படும் என வர்த்தகம், வாணிபம் , உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
அத்தியாவசிய உணவுப் பொருட்களை பதுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.