Tuesday, December 24, 2024
Homeசெய்திகள்இலங்கையின் கிழக்குத் திசையில் தளம்பல் நிலை உருவாகுவாகின்றது- வானிலை அதிகாரி

இலங்கையின் கிழக்குத் திசையில் தளம்பல் நிலை உருவாகுவாகின்றது- வானிலை அதிகாரி

எதிர்வரும் தினங்களில் கிழக்கு திசையில் அலைவடிவிலான தளம்பல் நிலையானது கால நிலைமையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் எதிர்வு கூறியுள்ளார்

இது பற்றி அவர் மேலும் கூறுகையில்,

அடுத்துவரும் சில தினங்களில் கிழக்குக் திசையில் அலைவடிவிலான தளம்பல் நிலை ஒன்று வானிலை நிலைமையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
இதன் தாக்கத்தின் காரணமாக எதிர்வரும் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படும்.

இதேவேளை வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலையும் படிப்படியாக ஆரம்பிக்கின்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை காணப்படும்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் இன்றைய தினத்தில் தாழ் அமுக்கப் பிரதேசம் ஒன்று விருத்தியடையக்கூடும்.

இது வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் பகுதியை அடைந்து மேற்கு – வடமேற்குத் திசையினூடாக நகர்ந்து எதிர்வரும் 12 ஆம் திகதியளவில் தமிழ் நாட்டுக் கரையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகையினால் வங்காள விரிகுடாவின் தென்மேற்குப் கடல் பிராந்தியத்திற்கு செல்லும் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற எதிர்கால எதிர்வு கூறல்களை கவனத்திற் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மட்டக்களப்பு தொடக்கம் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் எதிர்வுகூறியுள்ளார்

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments