அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தின் போது யாழ்ப்பாணம் வடமராட்சி வடக்கு பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் கிராமசேவகர் பகுதியில் இருவர் கிராம சேவகரின் முறைப்பாட்டையடுத்து கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்
குறித்த கிராமசேவையாளர் பிரிவின் வெள்ள நிவாரண சமைத்து உணவு வழங்கியபோது தந்தையயொருவர் பிள்ளைக்கு உணவு வழங்குமாறு கிராம சேவையாளருடன் கேட்டுள்ளார்
இரக்கமில்லாத கிராமசேவையாளர் குறித்த தந்தையின் வேண்டுகோளை நிராகரித்ததுடன் அவர்களுடன் தகாத வகையிலும் நடந்துக்கொண்டுள்ளார்
இதனால் பொதுமக்களுடன் ஏற்பட்ட தகராறு தொடர்பாக பொலிஸாருக்கு கிராம சேவையாளர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் கடந்த 01ஆம் திகதி கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களுக்கும் புதன்கிழமை (04) பருத்தித்துறை நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது.
கடந்த 01ஆம் திகதி கைது செய்யப்பட்டு திங்கட்கிழமை (02) நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் இன்று (04) வரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று (04) மீண்டும் இந்த வழக்கு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
இவ்வழக்குக்கு சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையிலான சட்டத்தரணிகள் மன்றுக்கு முன்வைத்த விவாதத்தின் அடிப்படையில் கைதான இருவருக்கும் பருத்தித்துறை நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.