சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்
அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரை மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று இடம்பெறுகின்றது.
இதில் கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால் இந்த விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என அவர் கேள்வியெழுப்பினார்
இதற்குப் பதிலளித்த நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்சன நாணயக்கார, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தில் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இதன்படி, அதிக காலம் தாழ்த்தாது விரைவில் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஹர்சன நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்