Monday, December 23, 2024
Homeஇந்தியாமழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஃபெஞ்சல் புயலின் கோரத்தாண்டவம், விழுப்புரம் மாவட்டத்தையே புரட்டிப் போட்டுள்ளது. மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே அமைச்சர்கள் பொன்முடி, சிவசங்கர், செந்தில் பாலாஜி ஆகியோர் விழுப்புரம் மாவட்டத்தில் முகாமிட்டு வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கியதோடு மீட்பு பணிகளை விரைந்து முடிக்குமாறு அரசுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுவதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று சென்னையில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.

இதையொட்டி காலை 8.30 மணியளவில் மரக்காணம் ஒன்றியம் மந்தவாய்புதுக்குப்பத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர் தொடர்ந்து விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் ஆய்வினை மேற்கொள்கிறார்.

பின்னர் அங்கிருந்து புறப்படும் அவர் விழுப்புரம் ரெட்டியார் மில் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள வி.பி.எஸ். மெட்ரிக் பள்ளியில் (தாமரைக்குளம்) அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

https://pathivunews.com/

https://www.maalaimalar.com/news/tamilnadu/fenjal-cyclone-cm-mk-stalin-travel-to-villupuram-749453

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments