கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை, விழுப்புரம், கடலூர், திருவண்ணமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.
சில மாவட்டங்களில் நேற்றிரவு வரை மழை நீடித்தது.
தற்போது புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.