புத்தளம் மாவட்டத்தில் முந்தல் 412 ஏக்கர் பகுதியில் நேற்று (28) மின்சாரம் தாக்கியதில் கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள் 55 மற்றும் 52 வயதுடைய தம்பதிகள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில்,
தம்பதியர் வசித்துவந்த வீட்டுக்கு அருகில் சிறிய வியாபார நிலையம் நடத்தி வந்துள்ளனர்.
வியாபார நிலையத்தில் மின்சார இணைப்புக்காக பொருத்தப்பட்டிருந்த மின்கம்பியில் ஏற்பட்ட பழுதை கணவர் சீர் செய்ய முயன்ற போது அவரை மின்சாரம் தாக்கியுள்ளது.
இந்நிலையில், கணவரை காப்பாற்ற முயன்ற மனைவியும் மின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
இருவரும் முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.