Tuesday, December 24, 2024
Homeசெய்திகள்சீரற்ற காலநிலையால் 132,110 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

சீரற்ற காலநிலையால் 132,110 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

நாட்டில் நிலவும் மோசமான காலநிலையால் நாடு முழுவதும் 132,110 குடும்பங்களைச் சேர்ந்த 441,590 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று (28) காலை 06.00 மணியளவில் வெளியிடப்பட்ட தகவல்களின் படி, இதுவரை 13 இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன,

ஒருவர் காணாமல் போயுள்ள அதே வேளை 20 பேர் காயமடைந்துள்ளனர்.
அனர்த்தம் காரணமாக 102 வீடுகள் முழுமையாகவும், 2,096 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

45,329 குடும்பங்களைச் சேர்ந்த 115,319 பேர் தற்போது உறவினர்களிடம் தஞ்சம் புகுந்துள்ளனர்

12,348 குடும்பங்களைச் சேர்ந்த 38,616 பேர் 347 பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

ஒன்பது மாவட்டங்களில் உள்ள 70 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையானது தொடர்ந்தும் அமுலில் உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments