அனர்த்த முகாமைத்துவ நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மட்டும் போதுமானதல்ல , தீர்வுகளை அடிமட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கான வழிமுறைகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஒழுங்கற்ற மனித நடவடிக்கைகளே இயற்கை பேரழிவுகளுக்கு காரணம் நிறுவன மட்டத்தில் விதிமுறைகள் இருந்தும் அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜயசேகர பதவியேற்பு நிகழ்வில் இன்று இணைந்து கொண்ட போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ,
அனர்த்த முகாமைத்துவத்தில் நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மட்டும் போதாது எனவும், தீர்வுகளை அடி மட்டத்திற்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப் பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
உள்ளூராட்சி நிறுவனங்களை பலப்படுத்தி அச்சுறுத்தல் உள்ள பிரதேசங்களில் ஏற்படும் அனர்த்தங்களை தடுப்பதற்கு புதிய தீர்வுகள் வழங்க வேண்டுமெனவும் அவர் சுட்டிக் காட்டினார்.