பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடந்த 13 மாதங்களாகத் தாக்குதல் நடத்தி வருகின்றது.
லெபனானில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பைக் குறிவைத்துத் தாக்குவதாகக் கூறும் இஸ்ரேல் தலைநகர் பெய்ரூட்டில் குடியிருப்பு கட்டடங்களையும் தகர்த்து வருகிறது.
லெபனானில் இதுவரை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 3,670 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
58 லட்சம் மக்கள் தொகை கொண்ட லெபனானில் இஸ்ரேல் தாக்குதலுக்கு அஞ்சி இதுவரை 1,30, 000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்
இவர்களில் பெரும்பாலானோர் பெய்ரூட் அருகே உள்ள எல்லை வலியாக அண்டை நாடான சிரியாவுக்குள் அகதிகளாகச் சென்றுள்ளனர்.
இதற்கிடையே பெய்ரூட் மற்றும் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் உள்ள மக்களை குடியிருப்புகளில் இருந்து வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் எச்சரித்தது.
இந்நிலையில் லெபனானில் தலைநகர் பெய்ரூட் முழுவதும் உள்ள பல குடியிருப்புகள் மீது நேற்றுஇஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.
66 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பெய்ரூட்டின் மையப்பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் தரைமட்டமானது.