அநுர அரசானது சர்ச்சைக்குரிய சர்வதேச நாணய நிதியத்தின் பிணை எடுப்புத் திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க சம்மதித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் தெரிவித்துள்ளார்
கடந்த வருடம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் பெறப்பட்ட நான்கு வருட கடனை தொடர்ந்தும் வழங்குவதற்கு தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் நிர்வாகத்துடன் இணக்கம் காணப்பட்டுள்ளது.
இலங்கை வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சர்வதேச நாணய நிதியம் விரும்பவில்லையென பீட்டர் ப்ரூயர் சுட்டிக்காட்டினார்.
புதிதாக பதவியேற்ற ஜனதிபதி அநுரகுமார திஸாநாயக்க நவம்பர் 14 தேர்தலில் அவரது தேசிய மக்கள் சக்தி கட்சி மகத்தான வெற்றியைப் பெற்ற பின்னர் நவம்பர் 21 அன்று நடாளுமன்றத்தில் ஆற்றிய முதல் உரையில், சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்துக்கு ஆதரவினை வெளிப்பத்தியமை குறிப்பிடத்தக்து