அயல் நாடு என்ற வகையில் இந்தியாவை நேசிக்கின்றோம்.
அதேவேளை தேசிய மக்கள் சக்தியின் அரசின் பொருளாதார மூலோபாயத்தின் அடிப்படையில் கொடுக்கல் – வாங்கல்களில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்
உலகத்தில் ஆதிக்கம் செலுத்துகின்ற நட்பு நாடு என்ற வகையில் சீனா மீது அன்பு உள்ளது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர குறிப்பிட்டார்.
இந்தியாவில் 130 கோடி மக்கள் வாழ்கின்றனர்.
இலங்கையின் பொருளாதார மேம்பாட்டின் அடிப்பைடயில் இந்தியாவுடன் எமது கொடுக்கல் – வாங்கல்கள் அமையுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்
அமெரிக்காவில் அனைத்து தொழில் துறைகளிலும் முன்னேற்றம் கண்ட நாடாக உள்ளது.
எனவே யாருடைய தொழில் துறைகளையும் அநுர அரசு நிராகரிக்காது என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மேலும் தெரிவித்துள்ளார்
அனைத்து தரப்புகளையும் நாட்டுக்கு பயனுள்ளதாக உள்வாங்கும் பக்குவமுள்ள ஆட்சியாகவே தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் உள்ளது என கடற்றொழில் நீரியல் வளங்கள் மற்றும் கடல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சுட்டிக்காட்டிள்ளாhர்