ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதிகள் உண்மை எனில் மாவீரர் துயிலும் இல்லங்களை மாவீரர் தினத்திற்கு முன்பு விடுவிக்க வேண்டுமென யாழ் தேர்தல் மாவட்டத்தில் பொது தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியுற்ற பொன் சுதன் தெரிவித்துள்ளார்.
வடமராட்சி பகுதியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
மாவீரர்களின் பெற்றோர்கள் கூட ஜனாதிபதி அநுரகுமாரவின் வாக்குறுதிகளை நம்பி தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளார்கள்.
அநுர வழங்கிய வாக்குறுதிகள் உண்மை எனில் முதல் கட்டமாக தாங்கள் யுத்தத்தில் மரணித்தவர்களை அடக்கம் செய்த இடங்களிலிருந்து உடனடியாக வெளியேறி நல்லெண்ணத்தை காண்பிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளாhர்