19 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் தாய்லாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று (14) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்
27 வயதுடைய தாய்லாந்து பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண் தாய்லாந்தின் பேங்கொக் நகரத்திலிருந்து நேற்று தினம் இரவு 11.55 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
சந்தேக நபரான தாய்லாந்து பெண்ணை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சோதனைக்குட்படுத்pய போதே அவர் போதை பொருள் வைத்திருப்பது தெரியவந்துள்ளது
தாய்வாந்து நாட்டை சேர்ந்த பயணப் பொதிகளிலிருந்து 22 கிலோ நிறையுடைய குஷ் மற்றும் ஹாஷ் வகை போதைப்பொருட்களே கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபரை இன்று (15) நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
https:/https://tamilwin.com/srilanka/tamilwhttps://tamilwin.com/srilankahttps://tamilwin.com/srilhttps://tamilwin.com/srilankaankain.com/srilanka