கனடாவின் ரொறன்ரோ பெரும்பாக பகுதியின் இரு யுவதிகளை கடத்திய ஒருவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது
சந்தேக நபர் வேறும் பெண்களை கடத்தி இருக்கலாம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
37 வயதான மார்க்கஸ் மோசஸ் என்ற நபரை இவ்வாறு சட்டவிரோதமாக செயற்பட்டு வந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பீல் மற்றும் ஹால்டன் போலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடத்தப்பட்ட யுவதிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு கடத்தப்படும் யுவதிகளை பாலியல் தொழில் ஈடுபடுத்தி சந்தேக நபர் பணம் ஈட்டி வந்ததாக தெரியவருகின்றது.
சந்தேக நபருக்கு எதிராக 26 குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.