இந்த போட்டியின்போது இந்திய வீரரான நிஹல் சரின் பலமுறை விதிமுறைக்கு மாறாக காய்களை நகர்த்தியதாக மேக்னஸ் கார்ல்சன் குற்றம்சாட்டியிருந்தார்.
அவரது அணியின் தலைவர் உத்தியோப்பூர்வமாக முறைப்பாடு செய்திருந்தார்
இது தொடர்பாக தொடரின் மூன்று பேர் கொண்ட முறையீட்டு நிர்வாகம் விசாரணை மேற்கொண்டது.
அப்போது நிஹல் சரின் விளையாட்டு விதிமுறைக்கு மாறாக காய் நகர்த்தல் ஏதும் செய்யவில்லை.
இந்த போட்டி சமநிலையில் முடிந்தது எனவும் இந்த முடிவு உறுதியானது எனத் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதேவேளையில் இந்த போட்டியின்போது ஒருவேளை விதிமுறையை மீறும் சூழ்நிலை உருவாகியிருக்கலாம் எனத் தெரிவித்தள்ளது.
நடுவர் தலையிட்டிருக்க வேண்டும் எனவும் அந்த நிர்வாகம் தெரிவித்துள்ளது.
விளையாட்டின்போது வீரர்கள் சதுரங்கத்திற்குள் காய்களை விட அனுமதி கிடையாது.
ஆனால் ஹரின் சதுரங்கத்திற்குள் காய்களை வைத்திருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளாhர்
இதில் விதிமுறை மீறல் நகர்த்தல் ஏதும் இல்லை.
ஆனால், காய்களை சதுரங்கத்தில் விட்டுவிட்டு, நேரத்திற்கான பட்டனை அழுத்த்திய போது விதிமுறை மீறல் தூண்டுதலை பெற்றிருக்கிலாம்.
போட்டியின்போது நடுவர் தலையிட்டியிருக்க வேண்டும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது
இது தொடர்பாக கார்ல்சென் தனது எக்ஸ் பக்கத்தில் ‘நிஹல் பல விதிமுறை மீறல் நகர்த்தலை மேற்கொண்டார்.
நடுவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனை தீவிர விளையாட்டாக எடுத்துக்கொள்ளாதது துரதிருஷ்டம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.