இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முல்தானில் நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 556 ஓட்டங்கள்; குவித்த நிலையில், இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது.
நேற்றைய 2-வது நாள்ஆட்ட முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 96 ஓட்டங்கள் எடுத்திருந்தது.
ஜோ ரூட் 32 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அவர் 27 ஓட்டங்களை தொட்டபோது ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 5 ஆயிரம் ஓட்டங்களை தொட்டார்.
இதன்மூலம் ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 5 ஆயிரம் ஓட்டங்களை கடந்த முதல் துடுப்பாட்ட வீரர் என்ற பெருமைய பெற்றுள்ளார்.
இவர் ஏற்கனவே 2015, 2016, 2021, 2022, 2024 ஆகிய ஆண்டுகளில் ஆயிரம் ஓட்டங்களை கடந்து சாதனைப் படைத்துள்ளார்.
இதன்மூலம் ஒரு வருடத்தில் ஆயிரம் ஓட்டங்களை அதிகமுறை கடந்த சச்சின் தெண்டுல்கர் சாதனையையும் நெருங்கி வருகிறார்.
சச்சின் தெண்டுல்கர் ஆறு முறை ஆயிரம் ஓட்டங்களை தாண்டியமை குறிப்பிடத்தக்கது