அரசியல் தீர்வைநோக்கிய பயணத்துடன் கூடிய அபிவிருத்தியே தமிழரசுக் கட்சியின் இலக்கு என முன்னாள் மாகாணசபை சுகாதார அமைச்சரும் வைத்தியருமான சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்
வவுனியாவில் நடைபெற்ற கட்சியின் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக்கொள்வதோடு நடைமுறைக்கேற்ப பொருந்தக்கூடிய வழிமுறைகளை ஆராயந்து புதிய அரசுடன் தேவைக்கேற்ப இணைந்து செயற்படவுள்ளதாக அவர் தெரிவிததுள்ளார்
அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொடுக்கவும் பாடுபட போவதாக சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்ற இதயசுத்தியுடன் அரசுடன் தொடர்ந்தும் பேசுவதற்கு தமிழரசுக் கட்சி என்றுமே தயாராக இருக்கின்றது என சத்தயலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்
அமையவுள்ள புதிய அரசாங்கத்தின் அணுகுமுறையில் மாற்றமொன்று ஏற்பட்டால் தமிழ்மக்களின் அரசியல் பிரச்சனையை தீர்த்துவைப்பது இலகுவான விடயம் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளாhர்