ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் பயணித்த கார் மீது இனம் தெரியாதவர் கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர்
இன்று (05) மாலை தேர்தல் பரப்புரைக்காக காரில் பயணித்த போது கார் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது
காரில் சசிகலா ரவிராஜ் இருந்த போதிலும் காயங்கள் எதுவும் இன்றி தப்பியுள்ளதாக தெரியவருகின்றது
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சசிகலா ரவிராஜ் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளும் கல் வீசி உடைக்கப்பட்ட நிலையில் இன்று (05) அவர் பயணித்த கார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.